“அனைத்து மதத் தலைவர்களுக்கும் உடனடியாக தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்” மஹிந்த உத்தரவு
Mahinda
Corona Virus
Corona Vaccine
By Vasanth
பௌத்த பிக்குகள் மற்றும் பிற மதத் தலைவர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசிகளை விரைவாக வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் பௌத்த துறவிகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
புத்த சாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சரான மஹிந்த ராஜபக்ஸ இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டார்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மதத் தலைவர்களும் விரைவில் கோவிட் தடுப்பூசிகளைப் பெறுவார்கள் என்று பிரதமர் அலுவலகம் உறுதியளித்தது.