மகிந்தவின் அடிப்படை உரிமைகள் மனு: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
Mahinda Rajapaksa
Sri Lanka
Supreme Court of Sri Lanka
By Harrish
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa) பாதுகாப்புப் பிரிவுகளைக் குறைப்பதற்கான முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
குறித்த மனு இலங்கை உயர் நீதிமன்றத்தால் இன்று(19.03.2025) விசாரணையின்றி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த அதிகாரிகளில் 60 பேரை அரசாங்கம் நீக்குவதற்குத் தீர்மானித்திருந்தது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
இதையடுத்து, அரசாங்கத்தின் குறித்த முடிவுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், அந்த மனுவில் உள்ள விபரங்களை நீண்ட நேரம் ஆய்வு செய்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்