சிறுபிள்ளைகள் போல் செயற்படும் ஆளும்கட்சி உறுப்பினர்கள் - எதிர்க்கட்சி கிண்டல்
ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவர் சிறு பிள்ளை போன்று பிரதமரின் வாக்குறுதி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கம்பஹாவிற்கு சென்று வேறு வேலை ஏதேனும் இருப்பின் அதை செய்யுமாறு நான் அவருக்கு அறிவுரை கூறுகின்றேன் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு எதுல் கோட்டேயில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், பொஹோட்டுவ்வ கூறிய கருத்து பிரதமரின் கருத்தாகவே நோக்க வேண்டும். பொஹோட்டுவ்வின் கருத்தாக நோக்க வில்லை.
பிரதமரால் நாடாளுமன்றத்தில் பொய் கூற முடியுமா? என்று நான் அவரிடம் வினவுகிறேன். அவர் அரசியல் அனுபவம் உள்ளவர். முதிர்ச்சி மிக்க அரசியல்வாதி. என்றாலும் அவரின் அரசியல் கொள்கைகளுக்கு இனங்குபவனல்ல. ஜெனிவாவில் என்ன நடக்கப் போகிறது என்ற விடயத்தை அறிந்து தான் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் மைத்திரி - ரணில் அதிகார போட்டி போல் இன்று ஜனாதிபதி - பிரதமர் அதிகார போட்டி ஏற்பட்டுள்ளது. நீரினால் வைரஸ் 0.001 வீதம் கூட பரவும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டால் நாங்கள் ஒரு போதும் இதற்கான அனுமதியை கோர மாட்டோம். மனித உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள். உலக சுகாதார ஸ்தாபன விதிமுறைகளுக்கு ஏற்ப அடிப்படை மனித உரிமையை வழங்குங்கள்.
பிரதமரிடம் கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை புதைப்பதற்கான உரிமையை வழங்குமாறு வினவினேன். சபாநாயகர் குறுக்கிட்டு சந்தர்ப்பம் அளிக்காமல் போனது. ஆனால் பிரதமர் இடையிட்டு எனது பெயர் கூறி பதிலாக புதைப்பதற்கான அனுமதி வழங்குவதாக தெரிவித்தார். சாதாரண மரணத்திற்கல்ல. சாதாரண மரனத்தை புதைப்பதற்கு அவரிடம் அனுமதி பெற வேண்டிய தேவையில்லை.
இதை ஒரு மதப் பிரச்சிணையாக பார்க்காமல் தேசியப் பிரச்சிணையாக பார்த்து பிரதமர் தெரிவித்ததன் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கையாக வர்த்தமானியை வெளியிட்டி இதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுங்கள்.
விஞ்ஞான ரீதியாக மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து செயற்படுமாறு அவர் இதன்போது வேண்டுகோளை விடுத்துள்ளார்.