தமிழக முதல்வருக்கு மகிந்த நன்றி தெரிவிப்பு
M. K. Stalin
Mahinda Rajapaksa
Tamil nadu
By Vanan
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் தமிழக முதல்வர் மு.ஸ்டாலின் உதவி வழங்க முன்வைந்துள்ளமை குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் அத்தியாவசிய உணவுப்பொருட்களை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக, தமிழக முதல்வர் மு.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமர் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்சினையாக பார்க்காது, மனிதாபிமான அடிப்படையில் நோக்கும் தங்களுக்கும் தமிழ்நாடு மாநில அரசிற்கும் இலங்கை மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.



ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 19 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்