மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ள மகிந்த!
Mahinda Rajapaksa
Prime minister
Sri Lanka Podujana Peramuna
By Kanna
பிரதமர் மகிந்த ராஜபக்ச நாளை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற, முன்னாள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரியுள்ளனர்.
அத்துடன், மாற்று அரசாங்கமொன்றை உருவாக்க முடியும் என்ற உத்தரவாதத்திற்கு உட்பட்டு பதவி விலகுவதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்திருந்தார் என்றும் தகவல் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் பிரதமர் மகிந்த நாளை தனது பதவி விலகல் குறித்து அறிவிப்பார் என்றும் சில உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்ற.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 9 மணி நேரம் முன்
