பயங்கரவாதத்தை இல்லாதொழித்தவர் பிரதமர் மஹிந்த - தம்மஜோதி தேரர் புகழாரம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒரு சிறந்த பௌத்த தலைவர் என்ற அடிப்படையில் நாட்டில் பெரும் நற்பெயர் உள்ளதாக களனி பல்கலைக்கழகத்துடன் இணைந்த பாலி மற்றம் பௌத்த கல்வி முதுகலை நிறுவனத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பேராசிரியர் மெதவாச்சியே தம்மஜோதி தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் அன்பாக பேசப்படுவதை நினைவூட்டிய தம்மஜோதி தேரர், தேசிய தலைவர்கள் மத்தியில் நமக்குள்ள தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என்றும் குறிப்பிட்டார்.
இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற 209ஆவது தர்ம உபதேச நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
கெப்படிகொல்லாவ குண்டு வெடிப்பின் போது பாதுகாப்பு பிரிவு வேண்டாம் என்ற போதிலும் மக்கள் மத்திக்கு சென்ற பிரதமர், பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அன்று அதிரடி தீர்மானம் மேற்கொண்டார்.
பிரதமரின் நேர்மை மற்றும் மென்மையின் காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் 'மஹிந்த மஹத்தயா' என அன்புடன் அழைக்கின்றனர்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஏற்பட்ட பொருளாதார சவால்களை சமாளித்து நாடு முன்னேற்றமடைந்து வந்தது. ஆனால் இந்த கொவிட் தொற்று நிலைமை காரணமாக எமது நாடு மட்டுமல்ல, உலகம் முழுவதுமே பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தருணத்தில் ஆட்சியாளர்களுக்கு உதவும் வகையில் மக்கள் செயற்பட வேண்டும் என தம்மஜோதி தேரர் கூறினார்.