இடித்து தரைமட்டமாக்கப்பட்ட முன்னாள் ஆளுநரின் ஹோட்டல்
வடமத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மஹீபால ஹேரத் மூலம் அநுராதபுரம் - பெரமியங்குளம் வனப்பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டதாக கூறப்படும் ஹோட்டல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
மஹிபால ஹேரத் அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி தனது மனைவியின் பெயரில் பெரமியன்குளம் வனப்பகுதியில் அமைத்துள்ள ஹோட்டல் மற்றும் 60 பேர்ச்சர்ஸ் காணியில் அமைத்துள்ள கட்டிடம் என்பவற்றை ஒரு மாதத்திற்குள் அகற்றுமாறு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, குறித்த கட்டிடத்தை இடிக்குமாறு பிரதேச செயலாளர் கடந்த மாதம் 18 ஆம் திகதி ஒரு கடிதத்தில் அவருக்குத் தெரிவித்திருந்தார்.
அதிகார துஷ்பிரயோகம்
இந்நிலையில், மஹிபால ஹேரத் மூலம் குறித்த கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கொள்கைக்கமைய அனுராதபுரம் மாவட்டத்தில் காணப்படும் வனப்பகுதியின் எல்லை நிர்ணயத்தை நீர்ப்பாசனத் திணைக்களம் அண்மையில் ஆரம்பித்திருந்தது.
இதற்கமைய பெரமியன்குளம் வனப்பகுதியை எல்லை நிர்ணயம் செய்யும் சந்தர்ப்பத்தில் எந்தவொரு சட்ட ஆவணங்களும் இன்றி அங்கு சட்டவிரோதமாக ஹோட்டல் அமைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
