முற்றாக வெள்ளத்தில் மூழ்கிய அம்பாறையின் பிரதான வீதிகள்
Ampara
Weather
By Independent Writer
தற்போது நாட்டில் நிலவிவரும் மழையுடனான காலநிலையால் அம்பாறை மாவட்டம் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
குறிப்பாக நேற்று நள்ளிரவு முதல் பெய்துவரும் கடும் காற்று மற்றும் மழையினால் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியள்ளன.
குறிப்பாக மாவடிப்பள்ளி தொடக்கம் காரைதீவு வீதி மற்றும், சம்மாந்துறை - அம்பாறை வீதிகள் இவ்வாறு வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சம்மாந்துறை கல்லரிச்சல் 02 பகுதியில் இரவு வீசிய பலத்த காற்றின் காரணமாக மரம் ஒன்று வீட்டின் மேல் விழுந்து வீடு சேதமடைந்துள்ளது.
மேலும், இன்று சுபஹ் தொழுகைக்குப் பின்னர் ஏற்பட்ட பலத்த காற்றின் காரணமாக, எமது கைர் ஜும்மா பள்ளிவாசலின் பின்புற பிரதான நுழைவாயிலில் உள்ள கண்ணாடி கதவின் பாதி பகுதி கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி