அழைப்பு விடுக்கப்பட்டால் பரிசீலிப்போம்! மைத்திரி பதில்
Srilanka Freedom Party
Maithripala Sirisena
Sri Lanka Politician
By pavan
சர்வகட்சி அரசில் இணையுமாறு எமக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டால், அது குறித்து பரிசீலிக்கலாம் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும், தொழிற்சங்க பிரமுகர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இராணுவத்தினரின் தாக்குதல்
அத்துடன், காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையும் அவர் வன்மையாகக் கண்டித்திருந்தார்.
இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து அவர் தனது சமுக வலைத்தளங்களில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
