நடப்பு அரசியலில் தனது ஈடுபாடு! மைத்திரி வெளியிட்டுள்ள தகவல்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் தற்போது தீவிர அரசியலில் இருந்து விலகியிருப்பதால், இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் நாட்டு மக்களுக்கு நல்லது செய்தால் தனக்கு மகிழ்ச்சி என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட மைத்திரி, மக்கள் நன்றாக வாழ்வதற்கும், பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் ஒரு நல்ல நாட்டை உருவாக்க வேண்டுமானால், நாட்டின் பொருளாதாரம் மேம்படுத்தப்பட்டு வறுமை ஒழிக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
கடினமான நிலைமை
மேலும், எரிபொருள் விலை உயர்வு குறித்து மற்றவர்களை விடவும் தான் அதிகம் கவலைப்படுவதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, தமக்கு தற்போதைக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட எந்தவொரு கொடுப்பனவுகளும் முழுமையாகக் கிடைப்பதில்லை என கூறியுள்ளார்.

எனவே அதனால் மற்றவர்களை விடவும் தமக்குத்தான் தற்போதைய நிலைமை மிகவும் கடினமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |