போதனாவில் அதிகாலையில் பற்றி எரிந்த மருந்து களஞ்சியசாலை...! பல மில்லியன் ரூபாய் இழப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பல மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் (09-05-2026) சனிக்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
சுமார் ஐந்து மணி நேரப் போராட்டத்தின் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஊழியர்கள் முயற்சி
தீயினை அணைக்க வைத்தியசாலை ஊழியர்கள் முயற்சிகளை மேற்கொண்டதுடன் மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர், இராணுவத்தினர், விமானப் படையினர், காவல்துறையினர் மற்றும் மின்சார சபையினர் உள்ளிட்ட பல தரப்பினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயினை அணைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சுமார் ஐந்து மணி நேரப் போராட்டத்தின் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மருந்து களஞ்சியசாலைக்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய அசிட் உள்ளிட்டவையும் காணப்பட்டமையால் தீ வேகமாகப் பரவியுள்ளது.
களஞ்சியசாலைப் பகுதி
இதனால் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் தீயில் எரிந்துள்ள நிலையில் கட்டடம் உள்ளிட்டவையும் கடும் சேதமடைந்துள்ளன.

தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து தற்போது மருந்து களஞ்சியசாலையைச் சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேவேளை, குறித்த களஞ்சியசாலைப் பகுதிக்குள் அண்மையில் மருந்துகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கக் குளிரூட்டப்பட்ட அறை (Cool Room) அமைக்கப்பட்டதாகவும் அதில் ஏற்பட்ட மின் கசிவு இந்தத் தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |