ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சிக்கலாக வந்த கருத்துக்கணிப்பு
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் மற்றும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கான நேரம் இது என்று பெரும்பான்மையான கனேடியர்கள் கருதுவதாக கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
ஆய்வமைப்பான Ipsos நிறுவனம், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆய்வொன்றை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த கருத்துக்கணிப்பின் படி கனடாவில் அடுத்த ஆண்டு தேர்தல்கள் நடைபெறும் என கனேடியர்களில் எதிர்ப்பார்க்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக் கணிப்பு
69 சதவிகித மக்கள் அடுத்த தேர்தலுக்கு முன் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள்.
நவம்பர் 14 மற்றும் 17 க்கு இடையில் நடத்தப்பட்ட இதேபோன்ற கருத்துக் கணிப்பில் 72 சதவீத கனேடியர்கள் தலைவர் பதவி விலக வேண்டும் என விரும்புவதாகக் கூறியுள்ளனர்.
மேலும் ஆய்வமைப்பான Ipsos நிறுவனம், ட்ரூடோவை ஆதரிக்காதவர்களுக்கு மட்டுமே இந்த உணர்வு மட்டுப்படுத்தப்படவில்லை; கடந்த கால தாராளவாத வாக்காளர்கள் கூட மாற்றத்தின் தேவையை காரணம் காட்டி, அவரது நேரம் வந்து விட்டது என்ற கருத்தை வெளிப்படுத்துகின்றனர்.
அடுத்த பிரதமர்
அவரது பதவி விலகலிற்கு வலுவான உணர்வு இருந்தபோதிலும் - கிட்டத்தட்ட 10 கனடியர்களில் ஏழு பேர், பதிலளித்தவர்களில் 63 சதவீதம் பேர் ட்ரூடோ பதவி விலகுவது சாத்தியமில்லை என்று நம்புகிறார்கள். என குறிப்பிட்டிருந்தது.
மேலும் யார் அடுத்த பிரதமராக வரவேண்டும் என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதன்படி துணை பிரதமரான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், கேபினட் அமைச்சர்களான மெலனி ஜாய், ஃப்ராங்கோயிஸ் ஃபிலிப் ஷாம்பேன், இந்திய வம்சாவளியினரான அனிதா ஆனந்த், மார்க் கார்னீ ஆகியோரின் பெயர்கள் அதிகமாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ட்ரூடோ தனது நெருங்கிய ஆலோசகர்களிடம் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |