அதிக சம்பளம் வாங்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பாக சவுதி அதிபர் விடுத்த விசேட தகவல்
சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன மற்றும் சவுதி அரேபிய நாட்டின் அதிபர் நசார் அல்தாசம் அல்கதானி இருவருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சபை அமர்வுகளின் பின்னர் நேற்று(3) நாடாளுமன்றில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது சவுதி அதிபர் கூறியதாவது,
“எமது நாட்டில் அதிக ஊதியம் பெறும் பெரும்பாலான வெளிநாட்டு பணியாளர்கள் உள்ளனர்.
இலங்கையிலும் பயிற்சி நிறுவனங்கள்

தற்போது இந்திய நாட்டில் தொழில் பயிற்றுவிப்பதற்கான எமது நட்டு நிறுவனங்கள் காணப்படுகின்றன.
அதே போல் இலங்கையிலும் அதிக பயிற்சி நிறுவனங்களை நிறுவுவதற்கு தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுடன் கலந்துரையாடியுள்ளேன்.
சிறிலங்கா மற்றும் சவுதி அரேபிய இடையே முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து அந்நாட்டு ஆய்வுகள் பற்றிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறான முதலீடு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் எமது நாடு இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்.” என தெரிவித்திருந்தார்.
இலங்கை அரகலய சதுரங்கத்தில் மகிந்தவின் அரசியலை உருமாற்றிய 121 நாட்கள் 5 மணி நேரம் முன்