மீண்டும் இந்தியாவை சீண்டும் மாலைதீவு! சீன ஆதரவு பெற்ற முய்சுவின் கருத்தால் கிளம்பிய புதிய சர்ச்சை
"நாங்கள் சிறிய நாடாக இருக்கலாம், ஆனால் அது எங்களை கொடுமைப்படுத்தும் உரிமத்தை வழங்கியது இல்லை" என்று மாலைதீவின் அதிபர் முகமது முய்சு காட்டமாக பேசியுள்ளார்.
அண்மையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு இந்தியாவை தாக்கிப் பேசியுள்ளார்.
சாகசத்தை விரும்புபவர்களுக்கு
கடந்த 3ஆம் மற்றும் 4 ஆம் திகதிகளில், மாலைதீவின் லட்சத்தீவுக்கு மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இதன்போது, அவர் அங்குள்ள கடற்கரையில் நடைபயிற்சியும், உரிய உபகரணங்களுடன், ஆழ்கடல் நீச்சல் பயிற்சியிலும் ஈடுபட்டார்.
பின்னர் இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றினையும் அவர் இட்டிருந்தார். அதில், சாகசத்தை விரும்புபவர்களுக்கு லட்சத்தீவுதான் சரியான தேர்வு'' என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
Recently, I had the opportunity to be among the people of Lakshadweep. I am still in awe of the stunning beauty of its islands and the incredible warmth of its people. I had the opportunity to interact with people in Agatti, Bangaram and Kavaratti. I thank the people of the… pic.twitter.com/tYW5Cvgi8N
— Narendra Modi (@narendramodi) January 4, 2024
இதன் போது மாலைதீவின் அரசியல்வாதிகள் பிரதமர் மோடியை இனரீதியாக, இழிவான வார்த்தைகளால் சமூக வலைத்தள பக்கங்களில் விமர்சித்தனர்.
அதில், 03 அமைச்சர்கள் "சுற்றுலாவைப் பொறுத்தவரை, மாலைதீவுடன் இந்தியா போட்டியிட முடியாது என்றும் மாலைதீவில் உள்ள வசதிகளை இந்தியாவால் அளிக்க முடியாது'' என்ற அர்த்தத்தில் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
சர்ச்சையை உண்டுபண்ணியுள்ளது
இவர்களின் இந்தக் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில் மாலைதீவின் தலைநகர் மாலேவில் உள்ள இந்தியத் தூதரகம் இந்த விடயத்தினை மாலைதீவு அரசின் கவனத்துக்கு எடுத்து சென்று பிரதமருக்கு எதிரான கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இதற்கு பதிலளித்த மாலைதீவின் வெளியுறவு அமைச்சகம், அரசுக்கும், அந்த கருத்துகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தால் இந்தியாவிற்கும் மாலைதீவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் சீன பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய மாலைதீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவை மறைமுகமாக தாக்கி கருத்துத் தெரிவித்துள்ளமை சர்ச்சையை உண்டுபண்ணியுள்ளது.