இந்தியாவை தவிர்த்து சீனாவின் உதவியை நாடிய மாலைதீவு
இந்தியாவுடனான உறவை விரும்பாத மாலைதீவின் புதிய அதிபர் முகமது மூயிஸ் சீனாவிலிருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்படி மாலைதீவுக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்ப வேண்டும் என சீனாவுக்கு மாலைதீவு அதிபர் முகமது மூயிஸ் வலியுறுத்தியுள்ளார்.
முதன்மை சந்தையாக சீனா
மாலைதீவு அதிபர் முகமது மூயிஸ் 5 நாள்கள் பயணமாக சீனாவுக்குச் சென்றுள்ளார். இரண்டாவது நாளான இன்று (ஜன. 9) தென்கிழக்கு சீனாவின் ஃபுஜியான் பகுதியில் பேசிய அவர்,
மாலைதீவுடன் நெருங்கிய உறவு கொண்டது சீனா. பரஸ்பர மேம்பாட்டில் மாலைதீவின் சிறந்த நட்பு நாடாகவும் சீனா விளங்குகிறது. கொரோனாவுக்கு முன்புவரை எங்களின் முதன்மை சந்தையாக சீனா இருந்தது.
அதிகளவிலான சுற்றுலா பயணிகளை
இதனை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் சீனா அதிக அளவிலான சுற்றுலா பயணிகளை மாலைதீவுக்கு அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மாலைதீவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ரஷ்யா இரண்டாவது இடத்திலும், சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |