இந்தியாவுடன் மோதலை வலுவாக்கும் மாலைதீவு!
சீனாவை புகழ்ந்து மாலைதீவின் அதிபர் பேசியது மறைமுகமாக இந்தியாவை சீண்டுவதாக அமைவதாக பலதரப்பட்டோராலும் பேசப்பட்டு வருகிறது.
மாலத்தீவின் இறையாண்மையை சீனா மதிக்கிறது. இரு நாடுகளும் ஒருவரையொருவர் மதிக்கின்றன என்றும் சீனாவின் பட்டுப்பாதை முன்முயற்சியானது இது இருதரப்பு உறவுகளை புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது, என மாலைதீவின் அதிபர் முகம்மது முய்சு சீனாவை புகழ்ந்து பேசியுள்ளார்.
தவிரவும், மாலைதீவின் உள்விவகாரங்களில் தலையிடும் நாடு சீனா அல்ல, இதனால்தான் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவு உள்ளது என்றும் சீன-மாலைதீவு உறவுகள் எதிர்காலத்தில் மேலும் வலுவடையும் என்று நம்பிக்கை உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு
அதுமாத்திரமன்றி, சீன அதிபர் ஜின்பிங் குடிமக்களின் நலனை முதன்மைப்படுத்தி வருகிறார், அவரது தலைமையின் கீழ் சீனாவின் பொருளாதாரம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மாலைதீவின் இலக்குகளை அடையவும் சீன அரசு உதவும் என்று ஜின்பிங் என்னிடம் உறுதியளித்துள்ளார் எனவும் அவர் கூறினார்.
மாலைதீவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப முன்னேற்றத்தை கொண்டு வருவதும் எனது இலக்கு, மாத்திரமல்லாமல் வளர்ந்த நாடுகளுடன் இணக்கமாக செயற்படும் நாடாக மாலைதீவை மாற்ற விரும்புகிறேன் என அவர் கூறி வம்படியாக இந்தியாவை சீண்டியுள்ளார்.
அண்மையில் மாலைதீவில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றம்
சீன ஆதரவாளரான அவர், மாலைதீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சீன பயணத்தில் அந்நாட்டுடன் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். பின்னர் நாடு திரும்பிய முகமது முய்சு, இந்தியாவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
இதற்கு மாலைதீவின் அவருக்கு மாலத்தீவின் முக்கிய இரண்டு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அவர் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டினை வெளிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
you may like this