இன்று இலங்கை வரும் மாலைதீவு ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு (Mohammed Muizzu) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இன்று (03.05.2026) இலங்கைக்கு வருகை தரும் மாலைதீவு ஜனாதிபதி எதிர்வரும் 06 ஆம் திகதி வரை இங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
2023ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், மொஹமட் முயிசு இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இது என சுட்டிக்காட்டப்படுகின்றது.
இருதரப்பு பேச்சுவார்த்தை
இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து அநுரகுமார திசாநாயக்கவுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் 06 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாலைதீவு ஜனாதிபதியின் இந்த வருகையை முன்னிட்டு இன்று (03) முதல் வரும் 06ஆம் திகதி வரை கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்றும் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (03) நாட்டை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |