தையிட்டி பவானி வீதி மீட்பு விவகாரம்...! விதிக்கப்பட்டுள்ள உத்தரவு

Sri Lankan Tamils Tamils M. A. Sumanthiran Sri Lanka
By Theepan May 12, 2026 10:46 AM GMT
Report

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையைப் பிரதேச சபை கைவிட வேண்டும் எனப் பலாலி காவல்துறையினர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் வலி. வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான பவானி வீதி காணப்படுகிறது.

குறித்த வீதியினை விடுவிக்கும் நோக்குடன் கடந்த 28 ஆம் திகதி வீதி அளவீடு செய்யப்பட்டது.

QR முறைமை ஊடாக எரிபொருள் விநியோகம் - அரசின் அறிவிப்பு

QR முறைமை ஊடாக எரிபொருள் விநியோகம் - அரசின் அறிவிப்பு

பிரதேச சபை

அதனைத் அடுத்து குறித்த வீதியை மறித்து அடைக்கப்பட்டுள்ள வேலியை விகாராதிபதி அகற்ற வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் பிரதேச சபை அந்த வேலியை அகற்றும் என்றும் அவ்வாறு அகற்றும் செலவீனத்தை விகாராதிபதி பிரதேச சபைக்கு வழங்க வேண்டும் எனவும் தவிசாளர் கடிதம் மூலம் விகாராதிபதிக்கு அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதேச சபை விகாரை வேலியை அடாத்தாக அகற்ற முற்படுவதாகப் பலாலி காவல் நிலையத்தில் விகாராதிபதி முறைப்பாடு செய்திருந்தார்.

தையிட்டி பவானி வீதி மீட்பு விவகாரம்...! விதிக்கப்பட்டுள்ள உத்தரவு | Mallakam Court Verdict On Thaiyitti Road On May 21

முறைப்பாட்டின் பிரகாரம் தவிசாளரைப் பலாலி காவல்துறையினர் அழைத்து வேலியை அகற்றினால் இனங்களுக்கு இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டு நல்லிணக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் எனவே வேலியை அகற்றும் பணிகளைக் கைவிட வேண்டும் எனவும் அச்சுறுத்தும் தொனியில் தெரிவித்துள்ளனர்.

அதற்குத் தவிசாளர் மறுப்பு தெரிவித்து பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை விகாராதிபதியே அடாத்தாகக் கையகப்படுத்தி வைத்திருப்பதாகவும் வீதியை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.

கபில சந்திரசேன பிணை மோசடி...! இடைத்தரகராகச் செயற்பட்டவர் அதிரடியாக கைது

கபில சந்திரசேன பிணை மோசடி...! இடைத்தரகராகச் செயற்பட்டவர் அதிரடியாக கைது

மனு விசாரணை

அந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வலி. வடக்கு பிரதேச சபை வீதியை மீட்கும் பணியைக் கைவிட வேண்டும் என்றும், அதற்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு வழங்க வேண்டும் எனவும் பலாலி காவல்துறையினர் மல்லாகம் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர்.

குறித்த மனு மீதான விசாரணையின் போது, ஒருதலைப்பட்சமாக விசாரணை செய்ய முடியாது எனக் கூறிய நீதிமன்றம், வலி. வடக்கு தவிசாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரை நேற்றைய தினம் மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்திருந்தது.

தையிட்டி பவானி வீதி மீட்பு விவகாரம்...! விதிக்கப்பட்டுள்ள உத்தரவு | Mallakam Court Verdict On Thaiyitti Road On May 21

அதன் பிரகாரம், தவிசாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோர் மன்றில் முன்னிலையான நிலையில், அவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகித் தமது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கின் மீதான கட்டளைக்காக எதிர்வரும் 21ஆம் திகதிக்கு நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

அதேவேளை, முறைப்பாட்டாளரான விகாராதிபதி மன்றில் முன்னிலையாகி இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உடைந்தது MGR கட்சி - தவெகவுக்கு அதிமுக ஆதரவு - சி.வி. சண்முகம் அதிரடி அறிவிப்பு

உடைந்தது MGR கட்சி - தவெகவுக்கு அதிமுக ஆதரவு - சி.வி. சண்முகம் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026