பறந்து கொண்டிருந்த விமானத்தில் கதவை திறக்க முற்பட்ட பயணியால் பரபரப்பு

Australia Flight
By Sumithiran Apr 07, 2025 05:29 AM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

 சனிக்கிழமை மாலை சிட்னி(sydney) நோக்கி சென்ற விமானத்தின் கதவுகளை ஜோர்தானிய(Jordan) நாட்டு பயணி திறக்க முயன்ற நிலையில் அவர் விமானக் குழுவினராலும் மற்ற பயணிகளாலும் தடுத்து நிறுத்தப்பட்டார், இதனால் விமான நிறுவனம் விமானம் தரையிறங்கியவுடன் காவல்துறை உதவியை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

45 வயதான ஷாடி தைசீர் அல்சாய்தே(Shadi Taiseer Alsaaydeh, 45) என்பவரே விமானத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்ததாக இரண்டு குற்றச்சாட்டுகள் மற்றும் விமான ஊழியர்களைத் தாக்கியதாக ஒரு குற்றச்சாட்டு ஆகிய குற்றச்சாட்டுகளுடன் புதன்கிழமை சிட்னியின் டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளார்.

பின்புற அவசர வெளியேறும் கதவைத் திறக்க முயற்சி 

கோலாலம்பூரிலிருந்து பயணித்த ஏர்ஏசியா எக்ஸ் விமானத்தின் பின்புற அவசர வெளியேறும் கதவைத் திறக்க அவர் முதலில் முயன்றதாகக் காவல்துறையினர் குற்றம் சாட்டுவார்கள், இதனால் விமான ஊழியர்கள் அவரை விமானத்தின் நடுவில் உள்ள இருக்கைக்கு அழைத்துச் சென்றனர்.

பறந்து கொண்டிருந்த விமானத்தில் கதவை திறக்க முற்பட்ட பயணியால் பரபரப்பு | Man Allegedly Attempted To Open Plane Door

பின்னர் அவர் நடு அவசர வெளியேறும் கதவைத் திறக்க முயன்றார், பின்னர் விமான குழுவினரும் பயணிகளும் அவரைத் தடுத்தனர், இதன் போது அவர் ஒரு விமான ஊழியரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு கிடைத்த இடம்

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு கிடைத்த இடம்

அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அல்சாய்தே மீது சுமத்தப்பட்டுள்ள ஒவ்வொரு குற்றத்திற்கும் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். அவுஸ்திரேலிய மத்திய காவல்துறையின் துப்பறியும் அதிகாரி டேவினா கோபலின், விமானத்தில் ஆபத்தான நடத்தை பொறுத்துக்கொள்ளப்படாது என்று கூறினார்.


"இந்த மனிதனின் செயல்கள் சோகமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கலாம், மேலும் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் விமானங்களில் கட்டுக்கடங்காத, வன்முறை அல்லது ஆபத்தான நடத்தையைப் பொறுத்துக்கொள்ள வேண்டியதில்லை" என்று கோபலின் கூறினார்.  

போர் நிறுத்தத்திற்கு உடன்படாத புடின்: உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்

போர் நிறுத்தத்திற்கு உடன்படாத புடின்: உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Chennai, India

07 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985