அதிஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றிபெற 20 வருட ஆராய்ச்சி - இறுதியில் தாத்தாவுக்கு அடித்த அதிஷ்டம்
20 வருட அயராத முயற்சி
அமெரிக்காவில் 20 ஆண்டுகளாக அதிஷ்ட இலாப சீட்டுக்களில் வெற்றி எண்களை ஆராய்ந்து ஜாக்பாட் அடித்திருக்கிறார் 77 வயதான தாத்தா ஒருவர். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் பால்டிமோர் மாகாணத்தின் மேரிலேண்ட் பகுதியை சேர்ந்த தாத்தா கடந்த செப்டெம்பர் 16 ஆம் திகதி உள்ளூரில் இருக்கும் கடை ஒன்றுக்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு அதிஷ்ட இலாப சீட்டு ஒன்றை அவர் வாங்கியுள்ளார். தன்னுடைய 20 வருட அனுபவத்தில் இருந்து 5 எண்களை உள்ளீடு செய்திருந்ததாக அவர் கூறியுள்ளார்.
அதன்பிறகு வீட்டுக்குத் திரும்பிய அவர், தனது வழக்கமான வேலைகளில் ஈடுபட தொடங்கியுள்ளார். அடுத்த நாள் அவர் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த போது, அதிஷ்ட இலாப சீட்டின் ஜாக்பாட் எண்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அப்போது தான் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு ஜாக்பாட் அடித்திருப்பதை அவர் அறிந்திருக்கிறார்.
எளிதில் எண்களை மறப்பதில்லை
இது குறித்து பேசிய அவர்,"நான் கடந்த 20 ஆண்டுகளாக அதிஷ்ட இலாப சீட்டில் வெற்றிபெறும் எண்களை கவனித்து வருகிறேன். அதன் அடிப்படையிலேயே வெற்றி எண்களை கணித்தேன். தொலைக்காட்சியில் ஜாக்பாட் எண்களை அறிவித்தபோதே அதை நான் அறிந்துகொண்டேன். ஏனெனில் நான் எளிதில் எண்களை மறப்பதில்லை" என்றார்.
தான் தேர்ந்தெடுத்த இலக்கங்கள் அவைதான் என அவருக்கு தெரிந்தும், சந்தேகம் காரணமாக அதிஷ்ட இலாப சீட்டு நிர்வாகத்தை தொலைபேசி மூலமாக அழைத்து விபரத்தை கேட்டிருக்கிறார். அதன்மூலம், தான் வெற்றிபெற்றதை உறுதிப்படுத்தியுள்ளார் அவர்.
இதுபற்றி பேசுகையில்,"வழக்கமாக நான் தேர்ந்தெடுக்கும் 5 எண்களில் 4 எண்கள் பொருந்தும். உண்மையை சொல்லப்போனால் 5 எண்களும் பொருந்தும் என ஒருபோதும் நான் நினைத்ததில்லை. ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த முறை நான் 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வென்றுள்ளேன்" என்றார்.