200 ரூபாய் கையூட்டல் பெற்ற நபர் கைது
ரூ. 200 கையூட்டல் பெற்ற நேரக் கண்காணிப்பாளர் ஒருவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளை, மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நேரக் கண்காணிப்பாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான்
தனியார் பேருந்தின் அட்டவணையில் கையொப்பமிடுதல், இயக்க நேரத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் திட்டமிடப்பட்ட அனைத்து பயணங்களையும் வழங்குவதற்கு ஈடாக ஒரு பயணத்திற்கு ரூ. 200 (இருநூறு ரூபாய்) கையூட்டல் கேட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹெய்யன்துடுவ பகுதியில் வசிக்கும் ஒரு நடத்துநர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, கடுவெல பேருந்து நிலையத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்
