களுத்துறையில் ஹோட்டல் பின்புறத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு
Kalutara
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Shalini Balachandran
களுத்துறை (Kalutara) வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குப் பின்புறத்தில் உள்ள கடற்கரை பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர் 70 வயதுடையவர் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதனடிப்படையில், இவர் தொடர்பில் எந்தவித தகவலும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இவர் கபில நிற சட்டையை அணிந்திருந்ததாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
