யாழில் அதிகரிக்கும் மரணங்கள் - தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு
யாழில் (Jaffna) தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (10.10.2025) இடம்பெற்றுள்ளது.
குமார சுவாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சண்முகவடிவேல் (வயது 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அவர் அவரது வீட்டுக்கு அருகேயுள்ள உறவினர் வீட்டில் சுருக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்
மேலும், சாட்சிகளை அச்சுவேலி காவல்துறையினர் நெறிப்படுத்தினர்.
மானிப்பாய் - சாத்தாவத்தை
யாழில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட வயோதிபப் பெண் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் - சாத்தாவத்தை பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் சிந்தாத்துரைமேரி (வயது 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அளவுக்கு அதிகமாக மாத்திரை
இந்நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் கொடுத்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக நேற்றையதினம் வீட்டில் வைத்து உட்கொண்டுள்ளார்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் காவல்துறையினர் நெறிப்படுத்தினர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
