விமானத்தில் பயணித்த கனேடிய பிரஜையால் ஏற்பட்ட பரபரப்பு
கனடாவிலிருந்து புறப்பட தயாரான விமானத்தின் கேபின் கதவில் இருந்து குதித்த ஆண் பயணி ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கனடாவின் ஆன்டாரியோ நகரில் உள்ள டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் ‛ஏர் கனடா'விற்கு சொந்தமான விமானம் ஒன்று டுபாய்க்கு புறப்பட தயாராக இருந்தது.
அப்போது ஆண் பயணி ஒருவர் தனது இருக்கையில் அமராமல் நின்று கொண்டிருந்த நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் விமானம் கிளம்பும் நேரத்தில் திடீரென கேபின் கதவை திறந்து கீழே குதித்துள்ளார்.
கனடாவில் பரபரப்பு
அவர் 20 அடி தார்ச்சாலையில் விழுந்து காயம் அடைந்துள்ளார். அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்ட அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பின்னர் காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து பயணியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர் எதற்காக விமானத்தில் இருந்து கீழே குதித்தார் என்று விசாரணை நடைபெற்று வருவதுடன் அவரின் நிலைமை குறித்து தற்போது வரை தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
அந்த நபர் குறித்த விவரங்களை காவல்துறையினர் வெளியிடாத நிலையில், அவர் கைது செய்யப்பட்டாரா என்ற தகவலும் வெளிவரவில்லை. இந்நிலையில் குறித்த விமானம் சுமார் 6 மணி நேரம் தாமதமாக கிளம்பி சென்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |