இளம்பெண் புகைப்பிடிப்பதை முறைத்துப் பார்த்த நபர் :பெண்ணின் மோசமான செயல்
இந்தியாவில் இளம் பெண்ணொருவர் புகைப்பிடிப்பதை முறைத்துப் பார்த்த நபர் ஒருவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார் அந்தப் பெண்.
இச்சம்பவம் நாக்பூர் நகரில் உள்ள மனேவாடா சிமெண்ட் சாலையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,நாக்பூர் நகரில் உள்ள மனேவாடா சிமெண்ட் சாலையில் 24 வயது ஜெயஸ்ரீ பண்டாரே, ஒரு கடையில் நின்று புகைபிடித்து கொண்டிருந்துள்ளார்.
வாக்குவாதம்
அப்போது அங்கு இருந்த ரஞ்சித் ரத்தோட் (28) என்ற நபர் குறித்த இளம்பெண் புகைப்பதை முறைத்துப் பார்த்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஜெயஸ்ரீ அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அச்சமயம் ஜெயஸ்ரீயின் தோழி சவிதா சாயரேவும் உடன் இருந்துள்ளார்.
ஜெயஸ்ரீ தன்னை திட்டுவதையும், புகைபிடித்து தன் பக்கம் புகைவிடுவதையும் தொலைபேசியில் படம்பிடித்த ரஞ்சித் அங்கிருந்து சென்றுவிட்டார்.
பின்னர் தனது நண்பர்கள் ஆகாஷ் ரவுத், ஜீது ஜாதவ் ஆகியோரை அழைத்துக் கொண்டு ஜெயஸ்ரீ மஹாலக்ஷ்மி நகருக்கு சென்றுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இதனையடுத்து அங்கு நின்ற ரஞ்சித் ரத்தோடை அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சியில் ஜெயஸ்ரீ கத்தியால் ரஞ்சித்தை மீண்டும் மீண்டும் குத்திக் கொன்றது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தப்பியோடிய ஜெயஸ்ரீ, சவிதா, ஆகாஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |