மனைவியை கொலை செய்துவிட்டு காவல்நிலையம் சென்ற நபர்! காரணம் வெளியாகியது
Police
Murder
SriLanka
Rambukkana
Pathampitiya
By Chanakyan
ரம்புக்கனை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட ஹேனேபொல பிரதேசத்தில் குடும்ப தகராறின் காரணமாக, கணவன் தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
மனைவி கொலை செய்யப்பட்டதன் பின்னர் காவல் நிலையத்தில் சந்தேகநபர் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் பத்தம்பிட்டிய - ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் ரம்புக்கனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி