மட்டக்களப்பில் நபர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு!
மட்டக்களப்பு - கல்லடி பாலத்தில் ஆண் ஒருவர் தன்னைதானே கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார்.
இந்த சம்பவமானது இன்று வெள்ளிக்கிழமை (10) பகல் 11.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இவர் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆடைகளை களைந்து தன்னுடைய கழுத்தை தானே பிளேற்றினால் வெட்டி உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட நபர்
குறிப்பிட்ட நபர் கொக்கட்டிச்சோலை முதலைக்குடா தாளையடித் தெருவைச் சேர்ந்த 33 வயதுடைய மகேந்திரன் அருள் என்பவராவார்.

குறிப்பிட்ட நபர் தவறான முடிவை செய்ய முற்படும் சமயத்தில் வீதியால் சென்றுகொண்டிருந்த மக்கள் அவரின் கால் கைகளை பிடித்து கட்டி 1919 காவுவண்டியில் ஏற்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் அந்த நபர் மனநோய் கொண்டவர் என காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் மட்டு தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |