மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம் கள ஆய்வில் பெரும் சர்ச்சைகள்
யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை ஒரே ஆண்டிற்குள் கட்டி முடிப்பதாக அரசாங்கத் தரப்பினரால் அளிக்கப்பட்ட வாக்குறுதி, நடைமுறையில் சாத்தியமற்றது எனத் துறைசார் நிபுணர்களும் பொதுமக்களும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மைதானம் அமைக்கப்படவுள்ள பகுதியில் மண்மேடுகள் அமைத்து நிலம் உயர்த்தப்பட்டுள்ளதால், மழைநீர் தேங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர்.
ஆனால், அங்கு மேற்கொள்ளப்பட்ட நேரடிக் கள ஆய்வின்போது, மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பு முழுவதும் மழைநீரால் சூழப்பட்டு வெள்ளக்காடாகக் காட்சியளிப்பது தெரியவந்துள்ளது.
மைதானத்தின் பின்பகுதியை உயர்த்துவதற்காக வெளியிலிருந்து மண் கொண்டுவரப்படாமல், மைதானத்திற்கு அருகிலுள்ள நிலப்பரப்பிலிருந்தே ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் பாரிய அளவில் மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதி ஒரு பெரிய குளம் போல மாற்றப்பட்டுள்ளது.
சதுப்பு நிலமாகக் காணப்படும் இப்பகுதியை மூன்று அடி உயரத்திற்கு நிரப்புவதற்கே நீண்ட காலம் எடுக்கும் நிலையில், ஒரே ஆண்டில் சர்வதேச தரத்திலான மைதானத்தை அமைப்பது சாத்தியமற்றது எனத் துறைசார் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்ற பின்னணியில் குறித்த விடயத்தை விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |