கட்டாய தடுப்பூசி அட்டை! நாடாளுமன்ற அனுமதிபெற முஸ்தீபு
Corona
Vaccine
People
Keheliya Rambukwella
SriLanka
By Chanakyan
பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சட்ட ஆவணங்கள் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் யோசனைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அண்மையில் அனுமதி வழங்கியது.
இது தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். வரவு - செலவுத் திட்ட விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருவதால் அதற்கான நடவடிக்கைகள் தாமதமாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.