மீண்டுமொரு தீவிரவாத சந்ததியை உருவாக்க முயற்சி - மங்கள சமரவீர ஆருடம்
muslims
sinhala
mangala
By Vasanth
இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மீண்டுமொரு புதிய தீவிரவாத சந்ததியை உருவாக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படுவதாக மங்கள சமரவீர கடுமையாக சாடியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பதிவில், பெரும்பான்மையினரின் மதவெறிக்கு அடிபணிந்து இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாமால் முஸ்லிம்கள் இருப்பதாகவும்,
அதேபோன்றே தற்போது உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி