வீதி விதிமுறைகளை மீறிய மானிப்பாய் காவல்துறையினர்...!
மானிப்பாய் காவல் நிலையத்தில் காவல்துறையினர் வீதி விதிமுறைகளை மீறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (23-05-2026) பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கும் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டியானது மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
பாதசாரி கடவை
இதன்போது மானிப்பாய் காவல்துறையினர் அங்கு கடமையில் இருந்தனர்.
அப்போது காவல்துறையினர் தமது வாகனங்களை வீதி விதிமுறைகளை மீறிப் பாதசாரி கடவைக்கு அண்மையில் நிறுத்தியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

சாதாரண காவல்துறையினர் தமது முச்சக்கர வண்டியையும் வீதிப் போக்குவரத்து காவல்துறையினர் தமது மோட்டார் சைக்கிளையும் அங்கு நிறுத்தி வைத்திருந்தனர்.
அத்துடன் ஏற்கனவே அங்கு வேறு வாகனங்களும் தரிக்கப்பட்டுக் காணப்பட்டன.
போக்குவரத்து நெரிசல்
அந்த வாகனங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடவில்லை ஆனால் அதற்குப் பின்னர் வந்த வாகனங்களை அங்கே நிறுத்த வேண்டாம் என்று கூறி மக்களுடன் முரண்பட்டுவிட்டு தாங்கள் அங்கேயே தமது வாகனங்களை நிறுத்தி வைத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
குறித்த வீதியானது போக்குவரத்து நெரிசலுடன் கூடிய சிறிய வீதியாகக் காணப்படுகிறது.

சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல்துறையினரே அதனைத் தட்டிக்கழிக்கும் வகையில் செயற்படுவது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர், யாழ். மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர், யாழ். மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர், உதவிப் காவல்துறை அத்தியட்சகர் மற்றும் மானிப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் விசாரணை நடத்தி இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் வழிசெய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |