திடீரென பற்றியெரிந்த மானிப்பாய் பிரதேச சபையின் குப்பை மேட்டால் பதற்றம்!
யாழ். மானிப்பாய் பிரதேச சபையின் குப்பை மேடானது நேற்றிரவு (03) திடீரென பற்றியெரிந்ததால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கல்லூண்டாய் குடியேற்றத்திட்டத்திற்கு அண்மையில் மானிப்பாய் பிரதேச சபையின் கழிவு சேகரிப்பு மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு நிலையம் அமைந்துள்ளது.
அந்த குப்பை மேட்டில் திடீரென தீ பற்றியதைத் தொடர்ந்து தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மக்கள் குற்றச்சாட்டு
குறித்த குப்பை மேட்டில் கடந்த காலங்களில் எந்தவிதமான தீ விபத்துகளும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் சீரான தரம்பிரித்தல் மற்றும் பாதுக்காப்பு முறை காரணமாக இவ்வாறு தீபத்து ஏற்படவில்லை எனவும், தற்போது சீரான முறையில் கழிவுப் பொருட்கள் தரம்பிரிப்பு இடம்பெறாத காரணத்தாலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த குப்பை மேடானது தமது குடியிருப்புக்கு அண்மையில் காணப்படுவதாலும், பிரதேச சபையினர் தற்போது அதனை சீராக பராமரிக்காத காரணத்தாலும் தாங்கள் தினமும் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்