மஹிந்த சமரசிங்கவின் இடத்திற்கு மஞ்சு லலித்வர்ண குமாரவை நியமிக்க தீர்மானம்
mp
mahinda samarasinghe
Manju Lalith Warnakumara
By Vanan
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவின் இராஜினாமாவைத் தொடர்ந்து வெற்றிடமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மஞ்சு லலித்வர்ண குமாரவை (Manju Lalith Warnakumara) நியமிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு இதற்கான தீர்மானத்தை நேற்று எட்டியதுடன், அது தொடர்பான வர்த்தமானியும் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹிந்த சமரசிங்க அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவிற்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதால், அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்