மன்னார் நகர சபை ஊழல் மோசடி குறித்து விசாரணை: முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு
மன்னார் (Mannar) நகர சபையில் இடம்பெற்ற ஊழல் குறித்து விசாரணைகள் மிக வேகமாக இடம்பெற்று வருவதாக மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மன்னார் நகர சபையில் இடம்பெற்ற ஊழல் குறித்து விசாரணைகள் மிக வேகமாக இடம்பெற்று வருகின்றது.
விசாரணைக் குழு
விசாரணைக் குழுக்களும் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. ஆளுநர் அலுவலகத்தில் இருந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமக்கு கடிதம் மூலம் தெரியபடுத்தப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இருந்து குழு ஒன்று வருகை தந்து ஆவணங்களை பரிசீலித்துச் சென்றுள்ளனர்.
ஊழல் மோசடி
மிக விரைவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படும் நிலை ஏற்படும்.
மன்னார் நகர சபைக்கு ஏற்பட்ட நஷ்டம் மீள கிடைக்கப்பெறும் எனவே மக்கள் சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
