மன்னார் மாவட்டத்தில் வாக்களிப்பு : முழுமையான விபரம் வெளியானது

Mannar Election
By Sumithiran Sep 16, 2024 12:01 PM GMT
Report

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது இம்முறை மன்னார்(mannar) மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் கனகசபாபதி கனகேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று(16) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,

எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலின் போது வன்னி தேர்தல் தொகுதி மன்னார் மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்க தகுதியானோர்

மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற உள்ளது.எமது நிர்வாக தேவை கருதி குறித்த 98 வாக்களிப்பு நிலையங்களும் 25 வலயங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வலயமும் உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் ஊடாக 98 வாக்களிப்பு நிலையங்களும் மேற்பார்வையின் கீழ் செயல்படும்.

மன்னார் மாவட்டத்தில் வாக்களிப்பு : முழுமையான விபரம் வெளியானது | Mannar District Voting Details Released

மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமாக மன்னார் மாவட்ட செயலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.அதற்குள் 7 வாக்கு எண்ணும் நிலையங்கள் ஸ்தாபிக்கப்படும்.அதனூடாக மாவட்டத்தின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு...! இறுதி முடிவை அறிவித்தது தமிழரசுக்கட்சி உயர்மட்டக் குழு

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு...! இறுதி முடிவை அறிவித்தது தமிழரசுக்கட்சி உயர்மட்டக் குழு

தபால் மூல வாக்களிப்பு

மன்னார் மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பை பொறுத்தமட்டில் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற 10 ஆயிரத்து 36 உத்தியோகத்தர்களின் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்று வாக்களிப்பு இடம்பெற்றது. இதில் 9 ஆயிரத்து 945 உத்தியோகத்தர்கள் தபால் மூல வாக்களிப்பை மேற்கொண்டுள்ளனர். 91 பேர் வாக்களிக்கவில்லை.குறித்த விண்ணப்பங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் வாக்களிப்பு : முழுமையான விபரம் வெளியானது | Mannar District Voting Details Released

ஜனாதிபதி தேர்தல் குறித்து அனைத்து பயிற்சி வகுப்புக்களும் இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தை பொறுத்த வரையில் தேர்தல் குறித்து 20 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.குறித்த முறைப்பாடுகள் அனைத்தும் வன்முறையுடன் தொடர்புபட்டதாக இல்லை. சட்ட மீறலுடன் தொடர்புபட்ட சாதாரண முறைப்பாடுகளாகவே அவை கிடைக்கப்பெற்றன.அதற்கான தீர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தலை சிறப்பான முறையில் நடத்துவதற்கு பொது மக்களை தெளிவுபடுத்தும் வகையில் ஒலி பெருக்கி மூலம் கிராமங்கள் ஊடாக தெளிவுபடுத்தப்பட்டு வருகிறது.

தமிழ் பொது வேட்பாளருக்கு 6 இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் : விக்னேஸ்வரன் நம்பிக்கை

தமிழ் பொது வேட்பாளருக்கு 6 இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் : விக்னேஸ்வரன் நம்பிக்கை

வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் 

மேலும் வாக்களிக்க தேர்தல் திணைக்களத்தினால் அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு விசேட தற்காலிக அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.வாக்களிக்க உள்ள விசேட தேவையுடையவர்களுக்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் 2 உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.கண் தெரியாதவர்கள் வாக்களிப்பதில் கடினம் என்பதால் உதவியாளர் ஒருவரை அழைத்துச் சென்று வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் வாக்களிப்பு : முழுமையான விபரம் வெளியானது | Mannar District Voting Details Released

வாக்குச்சீட்டு(2- 1/2) இரண்டரை அடி நீளமாக காணப்படுகின்றமையினால் பொது மக்கள் இலகுவாக தமது வேட்பாளரை தெரிவு செய்வதில் தாமதம் ஏற்படலாம்.இதனை கருத்தில் கொண்டு புள்ளி இடும் சிட்டைகளின் எண்ணிக்கையை வாக்களிப்பு நிலையங்களில் அதிகரித்துள்ளோம்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் 127 பிரச்சார நிலையங்கள் அனுமதியுடன் இயங்கி வருகின்றன.மாவட்டத்திற்கு இரண்டு பிரதான அலுவலகங்கள் மாவட்ட அலுவலகங்களாக இயங்கி வருகிறது. அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் இடம் பெற்று வருகிறது.

தமிழர் தலைநகரை அபகரித்தவர்களுக்கு துணைபோகும் தமிழ்தேசியவாதிகள் : அரியநேத்திரன் காட்டம்

தமிழர் தலைநகரை அபகரித்தவர்களுக்கு துணைபோகும் தமிழ்தேசியவாதிகள் : அரியநேத்திரன் காட்டம்

தேர்தல் குறித்து முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் மன்னார் மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவு இலக்கமான 023-2222215 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024