மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு!
hospital
protest
mannar
health workers
By Kalaimathy
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் பிரதேச வைத்தியாசலை சிற்றூழியர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணிவரை குறித்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் தாதியர் சங்கத்தினர், பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் மாவட்டத்தில் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பணிப்பகிஸ்கரிப்பானது 8 கோரிக்கைகளை உள்ளடக்கி இடம் பெற்றது. இதனால், இன்று காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




