மன்னார் சதோச மனித புதைகுழி அகழ்வு பணி: ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

Mannar Sri Lanka Media
By Shadhu Shanker Oct 09, 2024 10:51 AM GMT
Report

மன்னார் (Mannar) நகர மையப்பகுதியில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சதோச மனித புதைகுழி அகழ்வு பணியானது மீண்டும் இவ்வாரம் இடம் பெறவுள்ள நிலையில் புகைப்படம் எடுக்கவோ காணொளியாக பதிவு செய்யவோ மன்னார் மாவட்ட ஊடகவியளாலர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அகழ்வு பணியின் முதல்கட்டமாக தடய பொருட்களை பிரித்தெடுக்கும் நடவடிக்கை மற்றும் புதைகுழியை சூழ உள்ள பகுதியை ஸ்கான் மற்றும் அகழ்வு செய்யும் பணிகள் இடம் பெற்று வருகின்றது.

குறிப்பாக மன்னார் சதோச வளாகத்திற்கு அருகில் இராணுவ முகாம் அமைந்திருந்த பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடம் அமைந்துள்ள பகுதியிலும் அகழ்வு பணிகள் இன்றையதினம் (8) இடம் பெற்று வருகின்றது.

தமிழரசுக்கட்சியின் தகுதியுடைய வேட்பாளர் தானாம் இந்த அம்மணி!

தமிழரசுக்கட்சியின் தகுதியுடைய வேட்பாளர் தானாம் இந்த அம்மணி!

 மனித புதைகுழி 

 இருப்பினும் குறித்த அகழ்வு பணி தொடர்பான செயற்பாடுகளையோ,ஸ்கான் செயற்பாடுகளையோ புகைப்படம் எடுக்கவே காணொளியாக பதிவு செய்யவோ மன்னார் மாவட்ட ஊடகவியளாலர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மன்னார் சதோச மனித புதைகுழி அகழ்வு பணி: ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை | Mannar Mass Grave Scanning Media Banned

 முன்னதாகவே சதோச மனித புதை குழி அகழ்வு பணியை செய்தி சேகரிக்க காவல்துறையினரால் தடை விதிக்கபட்டிருந்த நிலையில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக குறித்த அகழ்வு பணி தொடர்பிலான உண்மையான விடையங்களை அறிக்கையிடவும் அகழ்வு செயற்பாடுகளை ஆவணப்படுத்தவும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

 என்ற போதிலும் புதிய நீதிபதியினால் தற்போது அகழ்வு பணியையோ அல்லது புதைகுழி தொடர்பிலான ஏனைய செயற்பாடுகளையோ கணொளியோ புகைப்படமே எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .

மேலும் குறித்த அகழ்வு தொடர்பிலும், புதைகுழி வழக்கு தொடர்பிலான செயற்பாடுகள் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணிகள் குரல் பதிவுகளை வழங்க மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

புலிகளை ஒதுக்கிய நரிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் : முன்னாள் போராளி காட்டம்

புலிகளை ஒதுக்கிய நரிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் : முன்னாள் போராளி காட்டம்

சங்குச் சின்னத்தில் முன்னாள் போராளி நகுலேஸ் வேட்புமனுவில் ஒப்பம்

சங்குச் சின்னத்தில் முன்னாள் போராளி நகுலேஸ் வேட்புமனுவில் ஒப்பம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026