மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் சபை அங்கத்துவத்தை இழக்கும் பிரதேச சபையின் தவிசாளர்
மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீது முஹம்மது முஜாஹிர் என்பவரை நாளை (14) தொடக்கம் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் சபை அங்கத்தவர் பதவியில் இருந்து நீக்கும் வகையில் இன்றைய தினம்(13) விசேட வர்த்தமானப் பத்திரிகை வெளியாகி உள்ளது.
வடமாகாணத்தின் ஆளுநர் பியன்சியா சறோஜினிதேவி மன்மத ராஜா சார்ள்ஸின் உத்தரவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீது முகம்மது முஜாஹிர் அவர்களுக்கு எவையேனும் தகுதியின்மைகள் உள்ளனவா என்பது பற்றி விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதி அலுவலகர் கந்தையா அரியநாயகம் அவர்களின் கீழ் அமைக்கப்பட்ட தனி நபர் விசாரனைக்குழுவினால் விசாரனை செய்யப்பட்டு வந்தது.
இந்த தரப்பின் சாட்சியங்களைக் கவனத்தில் கொண்டதன் பின்பு தனி நபர் விசாரணைக் குழுவின் அவதானிப்புக்கள் மற்றும் தீர்ப்புக்களுடன் என்னிடம் கையளிக்கப்பட்டுள்ள.
02-08-2021 ஆம் திகதி இறுதி அறிக்கையின் பிரகாரம், சாகுல் கமீது முஹம்மது முஜாஹிர் அவர்கள் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் என்ற வகையில் அப்பதவியில் பணிகள்,கடமைகளை நிறைவேற்றும் போது குற்றங்களை புரிந்தார் என்பதற்கு போதுமான சாட்சியங்கள் உள்ளன என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து எனக்களிக்கப்பட்ட அதிகாரங்களின் பிரகாரம் வடமாகாணத்தின் ஆளுநர் பியன்சியா சறோஜினிதேவி மன்மத ராஜா சார்ள்ஸ் ஆகிய நான் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் திரு சாகுல் ஹமீது முகம்மது முஜாஹீர் அவர்களை 14-09-2021 தொடக்கம் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் சபை அங்கத்தவர் பதவியில் இருந்து நீக்கம் செய்கிறேன் என வர்த்தமானியில் அறிவித்துள்ளார்.