மன்னார் மாவட்டத்தில் பதிவான 4ஆவது கொரோனா மரணம்!
hospital
corona
death
mannar
By Kalaimathy
மன்னார் மாவட்டத்தில் 4 ஆவது கொரோனா தொற்று மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த மரணம் இன்றைய தினம் புதன் கிழமை மதியம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்கேதீஸ்வரத்தைச் சேர்ந்த 64 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் கடந்த ஒரு வாரமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையிலேயே அவர் இன்று புதன் கிழமை உயிரிழந்தார்.
அவருடைய மரணத்திற்கு கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணம் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்