மன்னார் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோர் விபரம்!

srilanka mannar province
By Vasanth Mar 10, 2021 01:47 PM GMT
Report

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 11 ஆயிரத்து 230 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 305 கொரோனா தொற்றாளர்கள் தற்போது வரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று புதன் கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் அவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மேலும் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 8 பேர் மன்னார் மீன் சந்தை பகுதியில் மீன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பவர்கள்.

மேலும் 5 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் நுண்கடன் நிறுவனத்தின் பணியாளர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இருவர் மாந்தை மேற்கு பகுதியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் முதல் நிலை தொடர்பாளராகவும், ஒருவர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் கடமையாற்றியவரோடு நெருங்கி பழகியவராகவும், மேலும் ஒருவர் கர்ப்பிணிப் பெண் ஒருவராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் முசலி பகுதியில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட 83 பி.சி.ஆர்.பரிசோதனைகளின் போது எவருக்கும் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 305 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்த வருடத்தில் 288 நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த மாதத்தில் 38 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 11 ஆயிரத்து 230 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாதம் 683 பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் கா.பொ.த சாதாரண தர பரீட்சைகள் சுமூகமான முறையில் இடம் பெற்றுள்ளது. முதல் நிலை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்த மூன்று மாணவர்கள் சுகாதார பிரிவின் போக்கு வரத்து வசதி ஊடாக பரீட்சையில் தோற்றி இன்றைய தினம் பரீட்சையை நிறைவு செய்துள்ளனர்.

நாளை மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இடம் பெற உள்ள மஹா சிவராத்திரி நிகழ்வு மட்டுப்படுத்தப்பட்ட அளவு பக்தர்களுடன் கடுமையான சுகாதார நடைமுறைகளுடன் இடம்பெறவுள்ளது.

கண்காணிப்பு நடவடிக்கைகளில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி