கறுப்புகொடி கட்டி ஆயருக்கு அஞ்சலி! துக்கதினமும் அனுஸ்டிப்பு
மன்னார் மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் கலாநிதி இராயப்பு யோசப்பிற்கு வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா இறம்பைக்குளம் அந்தோணியார் ஆலயத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இதன்போது மறைந்த ஓய்வுநிலை ஆயர் கலாநிதி இராயப்பு யோசப்பின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி, மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கதினமும் அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், எமது இனத்திற்காகவும், நீதிக்காவும் போராடிய உன்னதமான மனிதராக அவர் இருந்தார்.
பாதிக்கப்பட்ட மக்கள் என்றவகையில் அவரது மரணம் எமக்கு பேரிழப்பாகவே இருக்கிறது. அதனை ஈடுசெய்ய எவராலும் முடியாது.
அவரது உயிர் பிரிந்தாலும் அவர் எம்மோடே என்றும் பயணிப்பார் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.