தேசிய கிரிக்கட் அணியை இலக்காக கொண்டுள்ள தமிழ் வீராங்கனை: குவியும் பாராட்டுக்கள்
மன்னார் மாவட்ட வீராங்கனையான சயந்தினி தற்போது இலங்கையின் கழகமட்ட கிரிக்கட் அணிக்காக தற்போது விளையாடி வருகிறார்.
இளம் வயதிலேயே நேர்த்தியான பந்துவீச்சினை வெளிப்படுத்திய அவர் தற்போது 23 வயது பெண்களுக்கான National Super League போட்டிகளில் விளையாடி வருகின்றார்.
அவர் கடந்த 27ஆம் திகதி National Super League போட்டிகளில் அறிமுகப் போட்டியில் விளையாடியுள்ளார்.
கொழும்பு அணிக்காக விளையாடும் அவர் ஆரம்ப பந்து வீச்சாளராக செயற்பட்டிருந்தார்.இந்தப் போட்டியில் இரண்டு ஒவர்களை வீசிய சயந்தினி வெறும் 10 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தியிருந்தார்.
கொழும்பு அணிக்காக விளையாடும் அவர் ஆரம்ப பந்து வீச்சாளராக செயற்பட்டிருந்தார்.இந்தப் போட்டியில் இரண்டு ஒவர்களை வீசிய சயந்தினி வெறும் 10 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தியிருந்தார்.
இலங்கை பெண்கள் அணியில் இணைவதே சயந்தினியின் கனவு என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |