“விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் கீழ்”கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
மன்னார் மாவட்டத்தில் மூன்று பாடசாலைகளில் - தெரிவு செய்யப்பட்ட 96 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
கருகம்பனை இந்து இளைஞர் கழகமும் சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையமும் இணைந்து முன்னெடுக்கும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
அந்தவகையில், மன்னார் மாவட்டத்தில் வெள்ளாங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட 30 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்றிட்டம் காலை ஒன்பது மணிக்கு பாடசாலை அதிபர் திரு.ம.சாந்தரூபன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் பாடசாலை அதிபர் திரு.ம.சாந்தரூபன் மற்றும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் உறுப்பினர்களால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மூன்றாம்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட 36 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்றிட்டம் காலை பத்து மணிக்கு பாடசாலை பிரதி அதிபர் திரு.க.நாகேந்திரன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் பாடசாலை பிரதி அதிபர் திரு.க.நாகேந்திரன் மற்றும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் உறுப்பினர்களால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.