மன்னாரில் சர்வாதிகாரமாக அமைக்கப்படும் அதானி நிறுவனத்தின் திட்டம் - எழுந்தது பாரிய எதிர்ப்பு!

Mannar Sri Lanka India Gautam Adani
By Kalaimathy Feb 24, 2023 11:52 AM GMT
Report

 மன்னார் மாவட்டத்தில் அதானி நிறுவனத்தின் காற்றாலை செயற்திட்டம், சர்வாதிகராமான முறையில் பலவந்தமாக மேற்கொள்ளப்படுவதாக மன்னார் பிரஜைகள் குழு குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிராகவும் அதே நேரம் காற்றாலை அமைக்கும் போதோ, விரிவுபடுத்தலின் போதோ மன்னார் மக்களின் ஆலோசனையோ கருத்துக்களையோ அரசாங்கம் உள்வாங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் மன்னார் பிரஜைகள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போது பிரஜைகள் குழுவினரால் குறித்த குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்கள்,   

“மன்னார் தீவு பகுதியில் ஏற்கனவே அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டிருக்கின்ற காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை தற்பொழுது விரிவுபடுத்துவதற்காக இந்தியாவின் தனியார் நிறுவனமான அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் மக்களுக்கு பேரிடிச் செய்தி

மன்னாரில் சர்வாதிகாரமாக அமைக்கப்படும் அதானி நிறுவனத்தின் திட்டம் - எழுந்தது பாரிய எதிர்ப்பு! | Mannar Windmill India Adani Enterprises Sl Peoples

மன்னார் தீவு பகுதியில் முன்னர் அமைக்கப்பட்டது போன்று, இதுவும் மிகப்பெரியதொரு காற்றாலை மின் திட்டத்தை அமைப்பதற்காக அரசாங்கத்தினால் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கின்றது என்ற செய்தி எங்களுக்கு ஒரு பேரிடியாக கிடைத்திருக்கின்றது.   

எமது மன்னார் மாவட்டத்து மக்கள் இந்த காற்றாலை பிரச்சினையின் காரணமாக ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை அமைதி வழியிலே சாத்வீகமான முறையிலே நடத்தி இந்த நாட்டு அரசாங்கத்திற்கும் அதிபருக்கும் தங்களுடைய ஆதங்கங்களை தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.

இந்த காற்றாலை மின் பூங்கா திட்டத்தின் மூலமாக மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள், ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அனைத்தையும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தும் கூட அவற்றை எல்லாம் கருத்தில் எடுக்காமல் மக்களுடைய வேண்டுகோளை புறந்தள்ளி திரும்பவும் தெற்கு பகுதியில் முடித்து வடபகுதியில் உள்ள கடற்கரை பகுதியிலே இந்த திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கின்றார்கள்.   

இந்த விசயத்தை மக்கள் சார்பாக நாங்கள் கவலையுடனும் ஆதங்கத்துடன் திரும்பவும் எங்களுடைய அரசாங்கத்தினுடைய கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.   ஏற்கனவே தலைமன்னார் தொடக்கம் தாழ்வுபாடு வரை கிட்டத்தட்ட 36 காற்றாலை மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கிறன.

மீன் பிடியில் வீழ்ச்சி

மன்னாரில் சர்வாதிகாரமாக அமைக்கப்படும் அதானி நிறுவனத்தின் திட்டம் - எழுந்தது பாரிய எதிர்ப்பு! | Mannar Windmill India Adani Enterprises Sl Peoples

அந்த குறிப்பிட்ட பகுதிக்குள் தலைமன்னார், நடுக்குடா ,பேசாலை, பெரியகரிசல், புதுகுடியிருப்பு, சின்னகரிசல், தோட்டவெளி, தாழ்வுபாடு, கீரி போன்ற கிராமங்கள் இந்த காற்றாலை மின் திட்டத்துக்கு உள்வாங்கப்பட்டிருக்கிறன.

இப்பகுதி மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் என்பது மீன்பிடி, சிறு விவசாயம், அதே போல் அந்த பகுதியில் இருக்கின்ற பனை, தென்னை வளங்களை பயன்படுத்தி தங்களுடைய வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.    ஏற்கனவே அமைக்கப்பட்ட இந்த திட்டத்தின் ஊடாக மீனவர்கள் மீன்பிடியிலே கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றனர்.

ஏற்கனவே இந்திய மீனவர் வருகையினால் பாதிக்கப்பட்டிருக்கும் எங்கள் மக்கள் இந்தக் காற்றாலை அமைப்பின் மூலமாக பாரம்பரிய கரவலை தொழில் மற்றும் கரையோர மீன்பிடி தொழிலை செய்கின்ற மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு அந்த தொழிலை கைவிடக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.   

தற்போது மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை மிக உயர்ந்த விலையிலேயே மீனவர்கள் கொள்வனவு செய்து அவர்கள் கஷ்டப்பட்டு கடலுக்கு சென்று வெறும் வலையுடன் மீன்பிடி இன்றி வீடு திரும்புகின்ற ஒரு துர்ப்பாக்கியமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.   எனவே தான் நாங்கள் இந்த விஷயத்தை அரசாங்கத்தினதும், அதிபரினதும் கவனத்திற்கு பல தடவைகள் கொண்டு வந்திருக்கிறோம்.   

வறுமையை எதிர்நோக்கும் ஆபத்து

மன்னாரில் சர்வாதிகாரமாக அமைக்கப்படும் அதானி நிறுவனத்தின் திட்டம் - எழுந்தது பாரிய எதிர்ப்பு! | Mannar Windmill India Adani Enterprises Sl Peoples

வீதிகளில் போராட்டங்களை மேற்கொண்டு மன்னார் மக்கள் தங்களுடைய அவல நிலையை பல முறை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். என்றாலும் கூட இவை எவற்றையும் கவனத்தில் எடுக்காமல் திரும்பவும் இப்படியான ஒரு செயல் திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்திருக்கிறது என்பதை நினைக்கின்ற போது எமக்கு மிகவும் மனவேதனையாக இருக்கின்றது.   

நமது மன்னார் மாவட்டத்தில் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் மன்னர் தீவுப் பகுதிக்குள் தான் வாழ்ந்து வருகின்றார்கள். நகரமும் தீவுப்பகுதிகுள் தான் அமைந்திருக்கின்றது.   எனவே இத்திட்டத்திற்காக பெருமளவு காணிகள் தனியாரிடம் இருந்து அதிகமான விலை கொடுத்து வாங்கப்பட்டதன் காரணமாக  விவசாயம், கடற்றொழில் அதேபோன்று பனை தென்னை வளங்களினால் தங்களுடைய ஜீவனோபாயத்தை நடத்திக் கொண்டிருக்கும் பலர், தற்போதும், எதிர்காலத்திலும் அனைத்தையும் இழந்து ஒரு வறுமை நிலைக்குள் தள்ளப்படவேண்டிய நிலை ஏற்படும். 

 

இதனால் நகரத்தில் இருக்கின்ற வியாபாரிகளின் வியாபாரங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான துன்ப நிலையில் தான் நாங்கள் மன்றாட்டமாக இந்த அரசாங்கத்திடம் இச்செயற்திட்டத்தை வேறு பயன்பாடு இல்லாத இடங்களுக்கு மாற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.   

ஏற்கனவே வடபகுதியில் ஒரு நாளைக்கு ஆயிரம் தொடக்கம் இராண்டாயிரம் வரி இந்திய இழுவை படகுகள் மீன்வளத்தை அழித்துக் கொண்டு செல்கிறார்கள்.   இது ஒரு புறம் இருக்க இந்த காற்றாலைகளும் கடற்கரையோரங்களில் அமைக்கும் போது கரையிலே மீன்கள் வருகின்ற நிலைமை குறைவடையும்.

அதானியிடம் வேண்டுகோள்

மன்னாரில் சர்வாதிகாரமாக அமைக்கப்படும் அதானி நிறுவனத்தின் திட்டம் - எழுந்தது பாரிய எதிர்ப்பு! | Mannar Windmill India Adani Enterprises Sl Peoples

இதனால் கரையோர மீனவர்கள் இன்னும் பாதிக்கப்படுகின்றார்கள். இன்னும் சில காலங்களில் இந்தத் தீவை விட்டு வெளியேற வேண்டிய துன்பமான நிலைக்கும் தள்ளப்படுவார்கள். 

இந்த ஆபத்தை உணர்ந்தவர்களாக மிகவும் வினையமாக இந்த நாட்டு அதிபரிடமும், அரசாங்கத்திடமும் இந்திய தனியார் நிறுவனமான அதானி நிறுவனத்திடமும் வேண்டி கொள்வது,  நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல எங்களுக்கும் அபிவிருத்தி திட்டங்கள் தேவை. ஆனாலும் மக்களுடைய வாழ்வாதாரத்தை வாழ்விடங்களை அழித்து ஏற்படுத்தும் அபிவிருத்தியாக வேண்டாம்.

அப்பிடியான அபிவிருத்தியை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை எனவே மன்னார் மாவட்டத்தில் பாவிக்கப்படாத எத்தனையோ ஏக்கர் காணிகள் உள்ளன. அவ்வாறான காணிகளை இனம் கண்டு அந்த இடங்களின் இந்த திட்டத்தை மாற்றி இந்த மன்னார் தீவில் நாங்கள் வாழ்வதற்கான உரிமையை தந்துவமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Whitchurch-Stouffville, Canada

10 May, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Swindon, United Kingdom

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, திருநெல்வேலி, Markham, Canada

13 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, கிளிநொச்சி, திருவையாறு

06 May, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, Markham, Canada

13 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், பண்டத்தரிப்பு

14 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada, Michigan, United States, Altena, Germany

10 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Anaipanthy

03 May, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Scarborough, Canada

11 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கந்தர்மடம்

12 May, 2015
மரண அறிவித்தல்

இணுவில், Toronto, Canada

08 May, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, London, United Kingdom

07 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலியும் 3ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024