‘முன்னாள் புரட்சிக்காரனின், கேவலமான அதலபாதாள வீழ்ச்சி’
ஐநாவுக்கு எதிராக இன்று பொங்கி எழுகிறார், அமைச்சர் வாசுதேவ நாணயக்கார..! இவர் ஒரு முன்னாள் புரட்சியாளன். இவரின் அதல பாதாள வீழ்ச்சியை இன்று காணலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அமைச்சர் வாசுதேவ கடந்த காலங்களில், பிடல் கஸ்ட்ரோ, சேகுவேரா ஸ்டைலில், "மார்க்சீய புரட்சியாளனாக" இருந்தபோது, 1980களில், அன்றைய ஐதேக அரசு, ஜேவிபி கிளர்ச்சியில், சிங்கள இளைஞர்களை பந்தாடிய போது, அதை எதிர்த்து, இளம் எம்பியாக இருந்த மஹிந்த ராஜபக்சவையும் அழைத்துக் கொண்டு, ஜெனீவாவுக்கே நேரடியாக போனவர்.
அங்கே போய், இதே ஐநா மனித உரிமை குழு (அன்று ஆணைக்குழு அல்ல, வெறும் குழுதான்!), சர்வதேச மன்னிப்பு சபை ஆகியவற்றில் இலங்கை அரசுக்கு எதிராக புகார் செய்தவர்.
அப்போ அப்படி. இப்போ இப்படி. சென்னைக்கு போனால் வடிவேலு விட்ட இடத்தை இவர் பிடிக்கலாம்.
இதுதான் வாசுதேவ என்ற, ஒரு முன்னாள் புரட்சிக்காரனின், கேவலமான அதலபாதாள வீழ்ச்சி..! என அவர் தெரிவித்துள்ளார்.