இத்தாலியின் இலங்கைக்கான தூதுவரை சந்தித்த மனுஷ நாணயக்கார : இருதரப்பு உறவுகள் குறித்தும் பேச்சு
இத்தாலியின் இலங்கைக்கான தூதுவர் டாமியானோ பிரான்கோவிக்கை சிறிலங்கா தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று சந்தித்துள்ளார்.
இத்தாலி மற்றும் இலங்கைக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையிலிருந்து இத்தாலிக்கு வேலைவாய்ப்பு காரணமாக இடம்பெயரும் தரப்பினர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
தொழிலாளர் இடம்பெயர்வு ஒப்பந்தம்
இத்தாலி மற்றும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இடையிலான தொழிலாளர் இடம்பெயர்வு ஒப்பந்தம் தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் இருவருக்கிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கைக்காக இத்தாலியில் ஒதுக்கப்படும் வேலை ஒதுக்கீட்டு முறை தொடர்பான கவலைகளையும் இந்த சந்திப்பின் போது மனுஷ நாணயக்கார வெளியிட்டுள்ளார்.


