வட்டுக்கோட்டை வைத்தியசாலை தொடர்பில் பல முறைப்பாடுகள் : பவானந்தராஜா எம்.பி பகிரங்கம்
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை தொடர்பாக பல்வேறுபட்ட தரப்பினரும் பல தடவைகள் தன்னிடம் முறைப்பாடு முன்வைத்ததாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா (Sri Bhavanandaraja) தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடமும் தான் பல தடவை கூறியுள்ளேன் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இன்றையதினம் காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தாதியர் பற்றாக்குறை
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், அந்த வைத்தியசாலையை தரம் உயர்த்தும் போது அங்கே பணி நியமன திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
அதாவது எத்தனை வைத்தியர்கள் இருக்க வேண்டும், எத்தனை தாதியர்கள் இருக்க வேண்டும், எத்தனை ஊழியர்கள் இருக்க வேண்டும் என்ற கட்டமைப்பு வந்தால் தான் நாங்கள் சுகாதார உத்தியோகத்தரை கேட்கலாம்.

நாங்கள் அது குறித்து நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றோம். அந்த வைத்தியசாலை 24 மணித்தியாலமும் இயங்க வேண்டும் என்றால் ஆகக் குறைந்தது எட்டு தாதியர்கள் அங்கே பணியாற்ற வேண்டும். ஆக அதற்குரிய ஒழுங்குகளை செய்ய வேண்டும்.
நாடளாவிய ரீதியில் எல்லா வைத்தியசாலைகளிலும் தாதியர் பற்றாக்குறை காணப்படுகிறது. ஆகவே அதனை நிவர்த்தி செய்த பின்னர் இந்த வைத்தியசாலையை இயங்க வைப்போம்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது… 1 மணி நேரம் முன்