விதிமுறைகளை மீறிய பலர் கைது! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்
Police
People
Ajith Rohana
SriLanka
By Chanakyan
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில், நேற்று 493 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு முகக் கவசங்கள் மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்பட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்ட கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், 10 ஆயிரத்து 906 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, இது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும், சுகாதாரத் தரப்பினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்படுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்