முக கவசங்களால் ஆபத்து! எச்சரிக்கும் அமைச்சர் மஹிந்த அமரவீர
covid
sri lanka
mask
By Vanan
முக கவசங்களால் சுற்றாடலுக்கு பாரிய அழிவு என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் கொவிட் தொற்றுக் குறித்தும், பொதுமக்களின் முக கவச பயன்பாடு குறித்தும் கருத்து வெளியிட்ட அவர்,
நாள் ஒன்றுக்கு 15 லட்சம் பயன்படுத்தப்பட்ட முக கவசம் சுற்றாடலில் சேர்க்கப்படுகிறது.
இதனால் பாரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகளுண்டு. வெளிநாட்டு இறக்குமதிகளைக் குறைத்து உள்நாட்டிலும் சுற்றாடலுக்கு ஏற்றவாறாக முக கவசம் தயாரிக்கப்படும்.
உடனடியாக முக கவசம் இறக்குமதி செய்வதை தடை செய்தால் சாதாரண மக்களுக்கு குறைந்த விலையில் முக கவசங்களை கொள்வனவு செய்வதில் சிரமம் ஏற்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்