பிரதான ஏற்றுமதி பயிர்களின் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி : பொருளாதாரத்துக்கு பெரும் பாதகம்
நாட்டின் பிரதான ஏற்றுமதி பயிர்களான தேயிலை, தென்னை மற்றும் இறப்பர் ஆகியவற்றின் உற்பத்தி இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சியான காலநிலை
வறட்சியான காலநிலை காரணமாகக் கடந்த பெப்ரவரி மாதத்தில் தேயிலை உற்பத்தியானது 15.6 மில்லியன் கிலோகிராமாக வீழ்ச்சியடைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த வருடம் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் இறப்பர் உற்பத்தி 5.3 மில்லியன் கிலோகிராமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேநேரம் இந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் 178.1 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்ததாகவும் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் கணிசமான அளவு வீழ்ச்சியாகும் எனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
